Love Quotes In Tamil | True Love Quotes In Tamil | Love quotes In Tamil For Husband | Love Quotes In Tamil For Him 2024

Love quotes: Hi everyone welcomes to our blog. Are you looking for Love Quotes In Tamil for your loved one? Here I give the best Love Quotes In Tamil for your loved one. The meaning of Love is a feeling of deep affection. The best and the most exceedingly terrible thing about love is that it can't be communicated in words. At the point when you really love somebody, it very well might be difficult to communicate those feelings through words. Indeed, genuine love may cause you to feel powerless in the knees and unfit to talk. Maybe that is the best sort of love – where the other individual makes you fall so totally infatuated that you can't think as expected. Despite the fact, that can turn into an issue also. The below Love Quotes In Tamil is to make it easier to express your feelings and emotions about your loved one.

Love Quotes In Tamil with images
Love Quotes In Tamil with images

Also Check:



Love Quotes In Tamil:


நீரில் இருந்தாலும்
நெருப்பில் இருந்தாலும்
தங்கத்தின் மதிப்பு மாறாது
அது போலத்தான்
நீ அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
என் மனம் என்றும் மாறாது.

உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற கனவு
களைந்து போகட்டும்.

உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதி இருக்கும் என் கவிதைகள்
உனக்கானது மட்டும் இல்லை
அதில் கலந்து இருக்கும்
என் உயிரும் உனக்கானது தான். 

நீ விரும்பினால்
உன் வாழ்வின் இறுதிவரை
உனக்கு துணையாக
வர  எனக்கு சம்மதம்
தேவைப்பட்டால் என் உயிரையும்
உனக்கு கொடுப்பேன்.

உலகமே நினைத்தாலும்
உண்மையான அன்பை தர இயலாது
ஆனால் ஒரு உண்மையான
அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தரலாம். 

துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே.

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்குமே தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்குமே தெரியாது
உன்னை தவிர!

என்னை பார்க்கும் போதெல்லாம்
பொய் கோபம் கொள்கிறாய்
எனக்கு தெரியும்
அது கோபம் இல்லை
வெட்கம் என்று!

Love Quotes In Tamil with images
Love Quotes In Tamil with images


காதலை தேடி நீ ஓடாதே!
தோற்று போவாய் வாழ்க்கையில்
அதுவே வாழ்க்கையை தேடி ஓடிப்பார்
வென்றுவிடுவாய் உன் காதலை. 

எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை
என்னை!
எப்போதுமே நினைத்தபடியே இருக்கிறேன்
நான் உன்னை!

காலம் எல்லாம்
உன்னை பார்த்தே வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில் சாய்ந்து
சாக வேண்டும்.

உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து
நான் உயிர் வாழ வேண்டும்
கண்மணியே.

பெண்ணே
உன்னை காணும் வரை
வாழ்க்கை பிடித்தது ஆனால்
உன்னை கண்ட பின்பு தான்
வாழவே பிடித்தது!

அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை. 

நூறு பெண்களிடம் காதலை சொல்வது
காதல் இல்லை
நூறு முறைவும் ஒரே பெண்ணிடம் 
சொல்வது தான் 
உண்மையான காதல்.

விரும்வியபோது விரும்பினேன்
என்பதை விட
வெறுத்த போதும் விரும்பினேன்
என்பதே உண்மையான அன்பு.


அழகை பார்த்து வருவது
காதல் இல்லை
அழுகை வராமல் பார்த்து கொள்வதுதான்
உண்மையான காதல்! 

True Love Quotes In Tamil:

Love Quotes In Tamil with images
Love Quotes In Tamil with images


பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியுதா பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
எல்லாமே நீ மட்டுமே.

உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன
என் இதயம் 
உன் புன்னகையால்
துடித்து கொண்டிருக்கிறது 

சுவாசிக்க
சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க
உன் நினைவுகள் போதுமடி

கன்னத்திலும் நெற்றிலும்
இல்லாத முத்த சுவை
நம் இதழ்கள்
கூடும் போதுதான்
தித்திக்கிறது!

உன் உறவாக மாறிவிட ஆசையில்லை
உன் உயிரிலே கலந்து
உயிராக மாறி உறவாட ஆசை 

உண்ணில் தொலைந்த
என்னை மீட்டுக்கொடு
இல்லையேல்
என்னுள் நீயும் தொலைந்துவிடு. 

உன்னில் என்னை கண்டதால்
என்னவள் நீதானோ என்று
என் கண்கள் உன்னையே தேடியது.

காற்றோடு கலந்த
பூவின் வாசமும்
எண்ணில் கலந்த
உனது நேசமும்
என்றுமே பிரியாதடி.
  
உன்னை பார்த்து
நான் என்னை மறந்தேனடி
உன் கண்ணை பார்த்து
இந்த உலகத்தையே மறந்தேனடி.

உன்னை மறப்பதற்கு
நீ ஒன்றும் மணலில் வரையப்பட்ட
ஓவியம் இல்லை
என் மனதில் செதுக்க பட்ட சிற்பம்.

உன்னை நினைத்து நினைத்து
ஒருநாள் துடிப்பதை
மறந்துவிட போகிறது
என் இதயம்!

நிஜமாய் மாறிய கனவு நீ
கனவிலும் இழக்க முடியாத உறவு நீ
நிஜத்திலும் கனவிலும்
நான் தேடும் அன்பு நீ.

யாரிடமும்
நான் உணர்ந்தது இல்லை
உன்னிடம் மட்டுமே உணர்தேன்
சொர்கம் உன்மடி என்று.

பக்கத்தில் நீ இல்லாததால்
கண்கள் கூட
என்னிடம் சண்டையிடுகிறது
இமைகளை மூடுவதற்கு.


உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து
நான் உயிர் வாழ வேண்டும்
கண்மணியே!

Love Quotes In Tamil For Him:

Love Quotes In Tamil with images
Love Quotes In Tamil with images


நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ
இப்பொது வரம் கேட்கிறேன்
உன்னை பிரியாத
வாழ்க்கை வேண்டும் என்று.

காதல் என்பது
கனவு இல்லை
இரு உள்ளங்கள் இணைந்து
வாழ்வதற்கான நினைவு .

அன்பு கொள்வதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பது
எனக்கு வெற்றியே!

சண்டை போட்டுவிட்டு
மறுநாள் எதுவும் நடக்காதது போல்
பேசும் உறவு கிடைத்தால்
வாழ்க்கை சொர்கமே.

உண்மையான காதல் என்பது
தொடாமல் காதலிப்பது இல்லை
என்ன நடந்தாலும்
விடாமல் இருப்பது.

காலம் எல்லாம்
உன்னை பார்த்தே
வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில்
சாய்ந்து சாக வேண்டும். 

உன்னை அடுத்தவளுக்கு
விட்டு கொடுக்கும் அளவுக்கு
நல்லவலும்  இல்லை
நீ வேண்டாம்
என்று விட்டு போக
கெட்டவளும் இல்லை.

தனக்கானவளை
குழந்தை போல் கொஞ்சும்
ஆண்கள் அவ்வளவு அழகு. 

என் இதயம்
துடிப்பதற்கு காரணம்
அது உன்னையே நினைப்பதால்.

எனக்கு
நீ வேண்டும்
என்பதை தவிர
சிறந்த வேண்டுதல்
ஏதும் இல்லை.

எனக்குள்
ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறது
நீங்காத உன் நினைவுகள்.

சிறகுகள் இல்லை
உன்னை தேடி வர
இதயம் இருக்கிறது
என்றும் உன்னை நினைத்திட. 

அவன் பார்வை
எனும் சுழலில்
சுழலும் பம்பரம் போல
சுழலுகிறது என் மனது.

உன்னை நினைத்து நினைத்து
ஒருநாள் துடிப்பதை
மறந்துவிட போகிறது என் இதயம் 

தோற்றுத்தான் போகிறது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன். 


Love Quotes In Tamil For Husband:

Love Quotes In Tamil with images
Love Quotes In Tamil with images


சொந்தங்கள்
எத்தனை இருந்தாலும்
ஓர் ஆணுக்கு மனைவிதான்
ஓர் பெண்ணுக்கு கணவன் தான்
அதற்கு இணை வேறேதும் இல்லை. 

உணர்ச்சிகளால்
ஆள நினைப்பதை விட
உணர்வுகளால் ஆழ்ந்துபார்
உன் மனைவியை விட
ஓர் உயர்ந்த உறவை
வாழ்வில் நீ காணவே மாட்டாய்! 

தொலைத்தால்
கிடைக்கும் பொருள் இல்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
கிடைக்காத பொக்கிஷம்
உன் அன்பு!

திருமணம்
ஆண்களின் வாழ்வில்
ஒரு நிகழ்வு!
பெண்களின் வாழ்க்கையில்
அது ஒரு மாற்றம்.

உயிர் கொடுக்கும் அளவிற்கு
கணவன் வேண்டாம் எனக்கு
யாரிடமும் விட்டு கொடுக்காத
கணவன் கிடைத்தாலே போதும்.

ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது
ஆண்மை இல்லை கடைசி வரை
அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே
உண்மையான ஆண்மை.

ஒரு பெண்
அழகென்று அனைவர்க்கும் தெரியும்
ஆனால்
ஒரு ஆண் அழகு என்பது
அவனை ஆழமாய் விரும்பும்
மனைவிக்கு மட்டுமே தெரியும்.

என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும் போது.

மனைவியின் கோபத்தை
புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண் மகனும்
தன் மனைவி
கண்ணீர் சிந்துவதை
விரும்புவதில்லை.

அன்பு !
யார் மீது வேண்டுமானாலும்
காட்டமுடியும் ஆனால்
கோபம்!
உரிமை உள்ளவர் இடத்தில மட்டுமே
காட்டமுடியும்.

என்னவனே!
நீ என்னிடம் கொண்ட
உரிமையை சிறிதும்
மற்றவர்களுக்கு தர
என் மனம் இடம் கொடுக்காது.

நான் உன்னை காதலிப்பது
உன்னோடு மட்டும் வாழ இல்லை
உனக்காக மட்டும் வாழ. 

தினமும் சண்டை போடுவேன்
ஆனால்  உனக்கொரு வலி என்றால்
முதலில் கலங்குவது என் விழி தானே!

தேவதை போல
மனைவி கிடைக்க வேண்டும்
என்று நினைப்பதை விட
கிடைக்கும் மனைவியை
தேவதையை போல
பார்த்து கொள்பவனே
உண்மையான ஆண்மகன். 

என் கருவில்
சுமக்காத என் முதல் குழந்தைதான்
என் கணவன்!
அவனை பெற்றெடுக்காத
இரண்டாவது தாய் தான்
மனைவி!

பெண் வாழும்
இரண்டாவது கருவறை
கணவன் இதயம் தான்.

ஒரு பெண்
மனைவியாக மாறும் போது
அவள் கணவனுக்காக
பல உறவாக மாறுகிறாள் 

எத்தனையோ காதல்கள் என்மேல்
எனக்கு உன்மீது மட்டுமே காதல்.

துணை என்பது
என்னோடு நிற்பவன் இல்லை
எனக்காகவே நிற்பவன்.

தனக்குள் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும்
மனைவிக்கு ஆறுதல் சொல்பவனே
உண்மையான கணவன்.

ஒரு முறையாவது
உன்னை கருவில் சுமக்க ஆசை
உன் மனைவியாக மட்டும் இல்லை
உன் தாயாகவும்.


மேலும் lonely Quotes, Sad Love Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes,  Attitude Quotes, Motivational Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes,Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

The above Love quotes are sure to melt the heart of your loved one. It will help you to express your feelings of true love. Thank you so much for visiting our site. we are updating our site regularly so keep following our site.

Related searches: 

  • love quotes in tamil text
  • romantic love quotes in tamil
  • love quotes in tamil lyrics
  • love feeling quotes in tamil
  • love quotes in tamil for him
  • love quotes in tamil english
  • love quotes in tamil download
  • romantic love quotes in tamil lyrics