Bharathiyar Quotes In Tamil | Bharathiyar kavithaigal In Tamil | Bharathiyar Tamil songs | பாரதியார் கவிதைகள் 2024

Bharathiyar Quotes: Hi friends welcomes to our site. Are you looking for Bharathiyar quotes in Tamil? Don't worry here we have a big collection of Bharathiyar Quotes In Tamil. All the quotes here are in the Tamil Language. People know that Bharathiyar created a big change in people before independence. Bharathiyar kavithai is only focused on freedom and women empowerment. All Bharathi kavithaigal is something different. Bharathiyar born in ettayapuram.He dies in 1921 but his quotes are still alive in the form. The very famous song odi vilayadu papa is being taught in school. Bharathiyar quotes are composed as Songs in Tamil and these songs were a big hit. It gives new energy to all people. Okay now, let's see the Bharathiyar Quotes In Tamil.
Bharathiyar Quotes In Tamil
Bharathiyar Quotes In Tamil


மகாகவி பாரதியார் எழுதிய கவிதைகளை பலரும் படித்திருப்பீர்கள்.இவர் எட்டயபுரத்தில் பிறந்து தன் தமிழ் புலமையினால் வான் புகழ் பெற்றவர் ஆங்கிலம் ஹிந்தி வங்காளம் சமைக்கிருதம் என் பல மொழிகளை கற்றவர்.இவரின் பாடல்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றின.இவரின் ஒவ்வொரு கவிதையும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். இவரின் கவிதையை வைத்து சினிமா பாடல்கள் பலர் எழுதி உள்ளனர். இங்கு பாரதியார் எழுதிய சிறந்த கவிதைகளில் சிலவற்றை கொடுத்து உள்ளோம்.

Also Check:

Bharathi quotes In Tamil:

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;–அன்பு 
தன்னில் செழித்திடும் வையம்
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;–தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

வெள்ளை நிறத்தொரு பூனை–எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை,–அவை
பேருக் கொருநிற மாகும்.

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்!–இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!–பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

சாதிகள் இல்லையடி பாப்பா;–
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி–அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!

“காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!”

“நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!”.

இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

Bharathiyar Quotes In Tamil
Bharathiyar Quotes In Tamil

பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்.

காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே”
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.
தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.
தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்

சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

Bharathiyar Quotes In Tamil
Bharathiyar Quotes In Tamil

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரண மில்லை;

நல்லதோர் வீணை செய்தே–
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

காக்கை சிறகினிலே நந்தலாலா–நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா–நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா–நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா –நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடாநந்தலாலா
சற்றுன் முகஞ் சிவந்தால்–மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால்–எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !
உன்கண்ணில் நீர்வழிந்தால்–எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ?–கண்ணம்மா! 
என்னுயிர் நின்ன தன்றோ ?

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந்தேகேட்டிருப்போம்.

Bharathiyar Quotes In Tamil
Bharathiyar Quotes In Tamil

ஓடி விளையாடு பாப்பா,–நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,–ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே–நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு–நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

 - பாரதியார் 


மேலும் buddha Quotes, Family Quotes, SMS, Kavithai, New Year Wishes, Chrismas Wishes, Attitude Quotes, Motivational Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Holi Wishes, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Bharathiyar Quotes in Tamil. Such a great poet he is. we hope you love these Bharathiyar quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.


Related searches:
  • bharathiyar kavithaigal in tamil
  • bharathiyar quotes in tamil and english
  • bharathiyar quotes in english
  • பாரதியார் வரலாறு தமிழ்
  • பாரதியார் கவிதைகள் பாடல்கள்
  • motivational quotes in tamil
  • பாரதியார் கவிதைகள் அர்த்தம்
  • பாரதியார் கவிதைகள் தமிழ் மொழி